உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பு விளைச்சல் அதிகரிப்புவிலை திடீர் குறைவு

கம்பு விளைச்சல் அதிகரிப்புவிலை திடீர் குறைவு

தேனி:கம்பு விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் மக்காச்சோளம் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பு சாகுபடியும் 5,000 ஏக்கரில் நடக்கிறது. மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. கோழிப்பண்ணையாளர்கள் விலை கொடுக்க தயாராக உள்ளனர். அதே நேரம் கம்பு விலை குறைந்துள்ளது.கடந்த மாதம் 1,500 ரூபாய் வரை விற்றது. தற்போது 1,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை சரிவால் கம்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ