உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துாண்டல் திட்ட துவக்க விழா

துாண்டல் திட்ட துவக்க விழா

போடி,: போடி அரசு பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுகம், வழிகாட்டுதல் பயிற்சிக்கான துாண்டல் திட்ட துவக்க விழா நடந்தது. முதல்வர் வசந்தநாயகி தலைமையில் நடந்தது. துணை முதல்வர் பத்மினி, பேராசிரியர்கள் உமா மகேஸ்வரி, பொன்மணி, உதவி பேராசிரியர் சுதா முன்னிலை வகித்தனர். மாணவர்கள் படிப்பதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், விடுதியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், மாணவர்கள், பெற்றோர்களின் பங்களிப்பு குறித்து பேராசிரியர்கள் எடுத்துக் கூறினர். விழாவில் பேராசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ