உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலரில் வந்தவர்கள் பெண்ணிடம் செயின் பறிப்பு

டூவீலரில் வந்தவர்கள் பெண்ணிடம் செயின் பறிப்பு

பெரியகுளம்: பெரியகுளத்தில் பட்டப்பகலில் ரேஷன் பொருட்கள் வாங்கி சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச்செயின் பறித்து சென்றனர்.பெரியகுளம் தென்கரை வடக்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி ராமரத்தினம் 60. இவரது மருமகள் நித்யாவுடன் 25. காலை 11:00 மணிக்கு பெருமாள் கோயில் அருகே ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு இருவரும் வீடு திரும்பினர். ராமரத்தினத்திற்கு முன்னால் 50 மீட்டர் இடைவெளியில் நித்யா நடந்து சென்றுள்ளார். டூவீலரில் வந்த இரு மர்மநபர்கள் ராமரத்தினத்திடம் 'சீனிவாசன்' என்பவரது வீட்டின் விலாசம் கேட்டுள்ளனர். எனக்கு தெரியாது என ராமரத்தினம் கூறி முடிப்பதற்குள், கண் இமைக்கும் நேரத்திற்குள் டூவீலர் பின்னால் உட்கார்ந்திருந்த மர்மநபர் ராமரத்தினம் கழுத்தில் அணிந்திருந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 3 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். தென்கரை எஸ்.ஐ., அழகுராஜா விசாரணை செய்து வருகிறார்.போலீஸ்க்கு சவால்: பெரியகுளத்தில் பட்டப்பகலில் ஹெல்மெட் அணியாத இரு மர்மநபர்கள் செயின் பறிப்பு சம்பவம் நடத்தியது தென்கரை போலீசாருக்கு சவாலாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை