உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலி டாக்டர்கள் இருவர் கைது

போலி டாக்டர்கள் இருவர் கைது

பெரியகுளம் : பெரியகுளத்தில் இரு போலி டாக்டர்கள் கைது. ஊசி, மருந்து கைப்பற்றப்பட்டது.பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை உதவி மருத்துவர் சங்கர்நாத், வடகரை எஸ்.ஐ., பிரேம்ஆனந்த் ஆகியோர் போலி டாக்டர் கண்காணிப்பு ரெய்டு நடத்தினர். இதில் பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனி சுவிஸ் மெடிக்கல் உரிமையாளர் பிலால் அன்சாரி 45, மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஊசி போட்டுள்ளார். இதே போல் பெரியகுளம், தேவதானப்பட்டி ரோடு ரிலீப் மெடிக்கல் உரிமையாளர் அகமது யூனுஸ்சேட் 51, ஊசி போட்டுள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மருந்து மாத்திரைகள் கைப்பற்றினர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ