உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அமைதியான தேர்தல் கலெக்டருக்கு முழு அதிகாரம்

அமைதியான தேர்தல் கலெக்டருக்கு முழு அதிகாரம்

தேனி : உள்ளாட்சி தேர்தலை எந்த சிக்கலுமின்றி அமைதியான முறையில் நடத்த, மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்களுக்கு தேர்தல் ஆணையம் முழு அதிகாரத்தை வழங்கி உள்ளது. சட்டசபை தேர்தலை விட பல மடங்கு கண்காணிப்பை அதிகரிக்கவும்,தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்தவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.பறக்கும் படைகள் அமைக்கவும், மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கவும், வீடியோ காமிரா, வெப் காமிரா பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ