உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் இரு போக பாசன நிலங்களுக்காக வைகை அணையில் இருந்து ஜூலை 3ல் நீர் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருமங்கலம் பிரதான கால்வாய் ஒரு போக பாசன நிலங்களுக்காக செப்.15ல் இங்கிருந்து கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. முறைப் பாசனம் நடைமுறையில் உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வைகை பூர்வீக பாசன நிலங்களுக்காக நவ. 10ல் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. தற்போது வைகை பூர்வீக பாசனப்பகுதி 1ல் உள்ள நிலங்களுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் நீர் ஆற்றின் வழியாக செல்கிறது.மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் நவ. 19ல் நிறுத்தப்பட்ட நீர் நேற்று மீண்டும் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடியாக இருந்த நீர் வெளியேற்றம் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 1630 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 58.79 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1183 கன அடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை