உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக நிறுத்தப்பட்ட நீர் முறைப்பாசன அடிப்படையில் 5 நாட்களுக்கு பின் நேற்று மீண்டும் திறந்து விடப்பட்டது. இம்மாவட்டங்களின் முதல் போக பாசனத்திற்கு ஜூன் 15 முதல் வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. முறைப்பாசன அடிப்படையில் நவ.4ல் நீர் நிறுத்தப்பட்டு, நேற்று காலை 9:00 மணிக்கு வினாடிக்கு 1130 கனஅடி வீதம் மீண்டும் திறந்து விடப்பட்டது. தற்போது வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி, 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி, குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி என மொத்தம் வினாடிக்கு 2049 கன அடி நீர் வெளியேறுகிறது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1561 கன அடி ஆகும். (மொத்த உயரம் 71 அடி). அணை நீர்மட்டம் 68.47 அடியாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ