உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் ரவீந்திரநாத் எம்.பி., தகவல்

40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் ரவீந்திரநாத் எம்.பி., தகவல்

பெரியகுளம் : தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை 22 வது வார்டில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை, கீழ வடகரை சிலம்பு ஓடை பகுதியில் வெள்ளத் தடுப்பூச்சுவர் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளன. இவற்றை ரவீந்திரநாத் எம்.பி., திறந்து வைத்தார்.அவர் கூறுகையில், ''வரும் லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்,'' என்றார்.ஓ.பன்னீர் செல்வம் அணி அமைப்பு செயலாளர் மஞ்சுளா, நகர செயலாளர் அப்துல்சமது, இளைஞர் பாசறை செயலாளர் நாராயணன், கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், ராணி, நிர்வாகி ராஜகோபால் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ