உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருமணம், திருவிழா எதிரொலி: வெற்றிலை விலை ஏறுமுகம்

திருமணம், திருவிழா எதிரொலி: வெற்றிலை விலை ஏறுமுகம்

கம்பம்: திருமண முகூர்த்தம், கோயில் திருவிழாக்கள் காரணமாக குறைந்து வந்த வெற்றிலை விலை அதிகரிக்க துவங்கி உள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி போன்ற ஊர்களில் வெள்ளை வெற்றிலையும், சின்னமனூர், கம்பம், மார்க்கையன் கோட்டை, சீலையம்பட்டி பகுதிகளில் கருப்பு வெற்றிலையும் சாகுபடியாகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெற்றிலை பறிப்பார்கள் . இரு மாதங்களுக்கு முன்பு வெள்ளை வெற்றிலை கிலோ ரூ. 350 , கருப்பு வெற்றிலை 250 வரை விற்றது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விலை குறைந்து வெள்ளை ரூ.280, கருப்பு ரூ.200 என விலை குறைந்தது. புரட்டாசி மாதம் என்பதால் திருமணம், கோயில் திருவிழாக்கள் பெரிய அளவில் இல்லை. தற்போது ஐப்பசி என்பதால் திருமணங்கள் நடக்கிறது. கோயில் திருவிழாக்களும் ஆரம்பமாகி உள்ளன. எனவே வெற்றிலை விலை அதிகரிக்க துவங்கி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை கிலோவிற்கு ரூ.10 அதிகாரித்து வெள்ளை ரூ.290, கருப்பு ரூ.210 ஆக உயர்ந்துள்ளது. இனி விலை அதிகரிக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை