உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  விளையாட்டு அரங்கில் சுகாதார வளாகம் அமைக்கும் பணி சுணக்கம்

 விளையாட்டு அரங்கில் சுகாதார வளாகம் அமைக்கும் பணி சுணக்கம்

தேனி:மாவட்ட விளையாட்டு அரங்கில் 4 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் சுகாதார வளாகம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்ட விளையாட்டு அரங்கம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு தினமும் காலை, மாலையில் கால்பந்து, ஹாக்கி, கபடி பயிற்சியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர். இது தவிர நடைபயிற்சி மேற்கொள்ள தேனி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர். ஆனால், போதிய அளவில் கழிப்பறைகள் வசதி இன்றி இருந்தது. இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன் மாவட்ட விளையாட்டு அரங்க பார்வையாளர் மாடத்திற்கு இருபுறமும் புதிதாக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகம் அமைக்கும் பணி துவங்கியது. ஆனால், இந்த பணி துவங்கி நான்கு மாதங்களாகியும் இதுவரை முடியவில்லை. இதனால் பயிற்சிக்கு வருபவர்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுகாதார வளாகம் அமைக்கும் பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டு பயிற்சி பெறுவோர், நடைபயிற்சி செல்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை