உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி; போக்குவரத்து பாதிப்பு

லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி; போக்குவரத்து பாதிப்பு

கம்பம் : கம்பமெட்டு ரோட்டில் வைக்கோல் ஏற்றி சென்ற மினி லாரி பின்னோக்கி வந்துகவிழ்ந்ததில் லாரியில் இருந்த தொழிலாளி பலியானார்.மற்றொருவர் காயமடைந்தார்.உசிலம்பட்டியில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு கேரளாவிற்கு கம்பமெட்டு மலை ரோட்டில் மினி லாரி சென்றது .லாரியை கம்பம் குரங்கு மாயன் தெருவை சேர்ந்த டிரைவர் முருகன் ஒட்டிச்சென்றார். லாரியில் வைக்கோல் ஏற்றும் தொழிலாளர்கள் நல்லதம்பி, ரமேஷ் இருந்துள்ளனர். மலை ரோட்டில் 18 வது கேர் பின் வளைவில் சென்ற போது லாரி திணறியுள்ளது .உடனே டிரைவர் தொழிலாளிகள் இருவரையும் இறங்கி டயர்களுக்கு பின் கல் வைக்ககூறினார். இருவரும் இறங்கி கல் எடுத்து டயருக்கு அடியில்வைக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக லாரி பின்னோக்கி வந்து நல்லதம்பி மற்றும் ரமேஷ் மீது மோதி நடு ரோட்டில் கவிழ்ந்து விழுந்தது.இதில் நல்லதம்பி அதே இடத்தில் பலியானார். பலத்த காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.நடு ரோட்டில் லாரி கவிழந்து கிடந்ததால் வாகன போக்குவரத்து தடைபட்டது.2 மணி நேரம் போராடி லாரி அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின்வாகன போக்குவரத்து சீரானது. கம்பம் வடக்குபோலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை