விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி: ஜாதி பாகுபடற்ற சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை கடைபிடிக்கும் 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது, ரூ.ஒரு கோடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்விருது பெற விரும்புவோர் https://tinyurl.com/Panchayataward என்ற இணையமுகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெறலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பத்தை இதே அலுவலகத்தில் ஜூலை 15 மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.