உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / இலஞ்சியில் விபத்துகளை தடுக்கரவுண்டானா அமைக்கப்படுமா?

இலஞ்சியில் விபத்துகளை தடுக்கரவுண்டானா அமைக்கப்படுமா?

குற்றாலம்:இலஞ்சியில் தொடர்விபத்து எற்படுவதை தடுக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்காசி குற்றாலம் செங்கோட்டை போன்ற ஊர்களில் மத்தியில் அமைந்துள்ள இலஞ்சியில் நான்கு வழிப்பாதை உள்ளது. குற்றாலத்திலிருந்து வடமாநிலங்களுக்கோ வடமாவட்டங்களுக்கே செல்லவேண்டுமானால் தென்காசியை சுற்றி செல்லாமல் குறுக்காக இலஞ்சி வழியாக சென்றுவர இலஞ்சி நான்கு வழிச்சாலை பிரதான சாலைகளாக பயன்படுத்தப்பட்டுவருகிறது.மேலும் தற்போது தென்காசியில் ரயில்வே ÷ம்பாலம் கட்டும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் புதிய பஸ் நிலையத்திற்கும் இந்த வழியாகத்தான் சென்றுவரவேண்டும்.

அண்டைய மாநிலமான கேரளாவிற்கும் இந்தபாதையே பிரதான பாதையாகவும் அமைந்துள்ளது. குற்றாலம், ஐந்தருவி போன்ற சுற்றுலா ஸ்தலங்கள் இதன் அருகே இருப்பதாலும், புண்ணிய ஸ்தலமான திருவிலஞ்சி குமரன்கோவில் இங்கு உள்ளதாலும், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வாகனங்கள், கேரளாவிற்கு அத்யாவசிய பொருட்கள் ஏற்றிசெல்லும் வாகனங்கள் என 24 மணிநேரமும் போக்குவரத்து உள்ள பகுதி என்பதால் இலஞ்சி நான்குவழிச்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி இலஞ்சி நான்கு வழிச்சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை