உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அரசு பஸ்சில் கிடந்த துப்பாக்கி, அரிவாள்

அரசு பஸ்சில் கிடந்த துப்பாக்கி, அரிவாள்

திருநெல்வேலி:சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று காலை வந்த அரசு விரைவு பஸ்சில், ஒரு பயணி விட்டுச் சென்ற துப்பாக்கி மற்றும் அரிவாளை போலீசார் கைப்பற்றினர்.சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு கிளம்பிய அரசு விரைவு பஸ், நேற்று காலை, திருநெல்வேலி பணிமனை வந்தது. பஸ் டிப்போவில் பஸ்சை சுத்தப்படுத்தும் போது, ஒரு படுக்கையின் கீழ் ஏர் கன் ரக கைத்துப்பாக்கி ஒன்றும், அரிவாள் ஒன்றும் கிடந்தன. போலீசார் அவற்றை கைப்பற்றி விசாரித்தனர்.சென்னையில் இருந்து வந்த அந்த பஸ்சில், இந்த இருக்கையில் வந்த நபர் கோவில்பட்டியில் இறங்கியுள்ளார். அவர் முன் பதிவு செய்த பயணியா எங்கு ஏறினார் என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை