| ADDED : மே 06, 2024 11:35 PM
திருநெல்வேலி : திருநெல்வேலி சம்பக்கடை தெருவை சேர்ந்தவர் பெர்டின் ராயன், 35. மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமம், சுரங்கத் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் நடக்கும் முறைகேடுகள், ஊழல்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் பெற்று, வழக்கு தொடர்ந்து வந்தார். கடந்த 4ம் தேதி காலையில், காரில் அவர் பேட்மிண்டன் பயிற்சிக்கு வந்தபோது மர்ம நபர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.தலை, முதுகு, இரண்டு கைகள் உட்பட ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டு காரணமாக, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.அவருக்கு போனில் தொடர்ந்து பேசி மிரட்டல் விடுத்த நபர்கள், அவர் வழக்கு தொடர்ந்ததால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என நான்கு பேரிடம், ஹைகிரவுண்ட் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சிறப்பு தனிப்படை எஸ்.ஐ., அருணாச்சலம் உள்ளிட்ட குழுவினர் விசாரிக்கின்றனர்.