உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கோவில் விழாவில் தகராறு சகோதரர்கள் குத்திக்கொலை

கோவில் விழாவில் தகராறு சகோதரர்கள் குத்திக்கொலை

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அப்புவிளை காரம்பாடு கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, ஓடக்கரை சுடலை மாடசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. கரகாட்ட நிகழ்ச்சியின் போது, யார் பெரியவர் என, ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், முருகன் மகன்களான மகேஸ்வரன், 47, மதியழகன், 43, மதிராஜன், 37, ஆகியோரை, மற்றொரு தரப்பைச் சேர்ந்த முருகேஸ்வரி மகன்கள் கத்தியால் குத்தினர். மதிராஜன், மதியழகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த மகேஸ்வரன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.முருகேஸ்வரி மகன்கள் லெவின், ராஜ்குமார், வருண்குமார் ஆகியோரை திசையன்விளை போலீசார் கைது செய்தனர். இரு பெண்கள் உட்பட, ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை