உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / முதன் முறையாக மாற்றுத்திறனாளியின் உறுப்புகள் தானம்

முதன் முறையாக மாற்றுத்திறனாளியின் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி : திருநெல்வேலி, குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் அரசம்மாள், 59. ஜூன் 10 தாழையூத்தில் டூ வீலரில் இருந்து கீழே விழுந்ததில் காயமுற்று மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவரது உடலில் இருந்து கல்லீரல், தோல், கருவிழிகள் தானமாக பெறப்பட்டன. உடனடியாக அவை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவரது உடலுக்கு மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி பாலன் தலைமையில் மருத்துவர்கள் பணியாளர்கள் மரியாதை செய்தனர். மாற்றுத்திறனாளி பெண் ஒருவரிடம் இருந்து முதல்முறையாக உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Azar Mufeen
ஜூன் 15, 2024 11:11

தலைவணங்குகிறேன்


Subramanian
ஜூன் 15, 2024 07:40

செத்தும் கொடுத்தாள் அந்த மூதாட்டி. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி