உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கிராபைட் சுரங்க திட்டம்; மத்திய அரசு ரத்து

கிராபைட் சுரங்க திட்டம்; மத்திய அரசு ரத்து

திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம், குருவிகுளம் பகுதிகளில் கிராபைட் உள்ளிட்ட கனிமம் தோண்டி எடுக்க கடந்தாண்டு நவ., 29ல் மத்திய சுரங்கத்துறையினர் இணைய வழியில் டெண்டர் விடுத்திருந்தனர்.மத்திய அரசு சுரங்கம் தோண்டினால் தங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும். நிலங்கள் வறட்சியாகும் என அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி பகுதியில் கனிமம் சுரங்கம் அமைவதற்கு அவரும் எதிர்ப்பு தெரிவித்தார். எம்.பி., துரை, முன்னாள் தி.மு.க., நிர்வாகி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் மத்திய அரசு குறிஞ்சாக்குளம் உள்ளிட்ட இடங்களில் அறிவித்திருந்த கிராபைட் கனிம சுரங்கம் தோண்டும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனை எம்.பி., துரை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Manivannan
ஜூலை 30, 2024 18:38

எந்த வளர்ச்சி திட்டத்தையும் / நாடு முன்னேற்றத்தில் பங்கு பெறாத அறிவற்ற சமூகம் ... விவசாயி ன்னு சொல்லற எவனும் மக்கள் / அரசியல் வாதிகள் அந்த விவசாயத்தில் என்ன சாதித்தார்கள் .... சரி நீர் பிரச்சனை என்ன தீர்வு / விவசாயத்திற்கு தேவையான நீரில் முழுமையடைந்தார்களா ... அதற்கு என்ன முயறச்சி எடுத்தார்கள் ... அவனவன் மகசூலில் வெற்றி குறைந்த இடத்தில் விவசாயத்தில் அறிவியில் பங்கு தமிழகத்தில் என்ன? நீர் தேக்க என்ன முயற்சி. எதற்கெடுத்தாலும் விவசாய நிலமென்கிறான். எவனாவது முன்னேற்றத்தை பற்றி பேசுகிறார்கள்...


மேலும் செய்திகள்



புதிய வீடியோ