உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வள்ளியூர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டரி திருடிய வழக்கறிஞர் கைது

வள்ளியூர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டரி திருடிய வழக்கறிஞர் கைது

திருநெல்வேலி: வள்ளியூர் நீதிமன்ற வளாகத்தில் ஜெனரேட்டர் பேட்டரி திருடிய வழக்கறிஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜெனரேட்டர் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஜெனரேட்டரை இயக்கிய போது இயங்கவில்லை. அதிலிருந்த பேட்டரி திருடு போயிருந்தது. நீதிமன்ற ஊழியர் புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் விசாரித்தனர்.அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வழக்கறிஞராக உள்ள முருகன் 56, அவரது வாடிக்கையாளரான ஏர்வாடி ஆதிநாராயணன் ஆகியோர் சேர்ந்து பேட்டரியை திருடி பழைய பொருட்கள் கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் நேற்று இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை