உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / துாத்துக்குடியில் கொலை

துாத்துக்குடியில் கொலை

திருநெல்வேலி:துாத்துக்குடியில் மதுபான கடையில் நடந்த மோதலில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.துாத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லுாரைச் சேர்ந்தவர் மந்திரம், 30. கட்டட தொழிலாளி. நண்பர் மகாராஜன், 28, செய்துங்கநல்லுார் அடுத்த மேல துாது குழியைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவில் மந்திரம் திருநெல்வேலி மகாராஜநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தார்.குடிபோதையில் மகாராஜனை மொபைல் போனில் அவதுாறாக பேசினார். இதில் ஆத்திரமடைந்த மகராஜன், மந்திரத்தை, 'நீ எங்கே இருக்கிறாய்? நான் வருகிறேன்' என கூறினார்.மந்திரம் இருக்குமிடம் அறிந்து வந்த மகாராஜன், டாஸ்மாக் மதுபான கடையில் அவரை அரிவாளால் வெட்ட முயற்சித்து விரட்டினார். தப்பி ஓடிய மந்திரத்தை ரயில்வேகேட் அருகில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போலீசார் உடன் மகாராஜனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ