உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் 

திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் 

மதுரை : திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ஸ்டேஷனுக்கு முன்பதிவு இல்லாத 17 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி - ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் ஜூலை 18, 25 வியாழக்கிழமைகளில் அதிகாலை 1:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9:00 மணிக்கு ஷாலிமார் சென்றடையும்.மறு மார்க்கத்தில் ஷாலிமார் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06088) ஷாலிமாரில் ஜூலை 20, 27 சனிக்கிழமைகளில் மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1:15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களில் 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 17 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 ரயில் மேலாளர் பெட்டியுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.கோவில்பட்டி, விருது நகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, சாமல் கோட், துவ்வாடா, சிமாச்சலம் வடக்கு, பென்டுர்டி, கோட்ட வலசா, விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ரோடு, பலாசா, பிரம்மாபூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், ஜஸ்பூர் கியான்ஸ்ஹர், பட்ரக், பாலேஸ்வர், கரக்பூர், சந்தர காச்சி ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.இந்த ரயில்களிலுள்ள இரண்டு படுக்கை வசதி பெட்டிகளுக்கான முன்பதிவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ajai Sait
ஜூலை 18, 2024 22:29

வைசாக் வழியாக இயக்கம் செய்யவும்


Ajai Sait
ஜூலை 18, 2024 22:26

விசாகப்பட்டினம் வழியாக செல்ல வேண்டும் தமிழ் மாணவர்கள் நெல்லை நகர்க்கோயில் இருந்து லா படித்து வருகிறார்கள் மேலும் வைசாக் துறைமுகம் tourist place ஆகும்


Ms Mahadevan Mahadevan
ஜூலை 17, 2024 11:43

ரெகுலர் ஆக இயக்க வேண்டும். கொஞ்ச நாட்கள் கழித்து நிப்பாட்டாமல் இருக்க வேண்டும்


Barakat Ali
ஜூலை 17, 2024 08:16

புதிய வண்டிகளை அறிமுகப்படுத்துவதே விட பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.. அஸ்வினி வைஷ்ணவ் என்னும் படித்த புத்திசாலியின் திறமை மெய்சிலிர்க்க வைக்கிறது .......


KB TRADERS Agro foods (T. Vinayagamoorthy)
ஜூலை 17, 2024 07:50

நல்ல செய்தி ஐயா.


KB TRADERS Agro foods (T. Vinayagamoorthy)
ஜூலை 17, 2024 07:49

நல்ல விஷயம் ஐயா.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி