மேலும் செய்திகள்
தாமிரபரணி ஆறு சீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட கமிஷனர் ஆய்வு
20 hour(s) ago
திருநெல்வேலி தென்காசியில் மழை
02-Jan-2026
எரிவாயு பங்க்கில் வேன் தீக்கிரை
30-Dec-2025
திருநெல்வேலி:குடிபோதையில் கொலை, போலீஸ் மீது தாக்குதல், அரசு பஸ் சேதம் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் இருவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தென் திருபுவனத்தை சேர்ந்தவர் பேச்சிதுரை 24. கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சந்துரு 23. ரவுடிகள். பல வழக்குகள் உள்ளன. திருநெல்வேலி மத்திய சிறையில் இருந்தவர்கள் அண்மையில் ஜாமினில் வந்தனர். இவர்கள் போதையில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு டூவீலரில் அம்பாசமுத்திரத்தில் இருந்து வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழிக்கு வந்தனர். அப்போது காரில் சென்ற 3 பேரை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். அவர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். ரவுடிகள் இருவரையும் அங்கு ரோடு மேம்பால பணியில் ஈடுபட்ட சாத்துார் கருப்பசாமி என்பவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற இருவரும் கருப்பசாமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் டூவீலரில் திருப்புடைமருதூர் செல்லும் வழியில் நிதி நிறுவன ஊழியர் வெங்கடேசனை அரிவாளால் வெட்டினர். தொடர்ந்து அவ்வழியே வந்த அரசு பஸ்சை அரிவாளால் வெட்டியும், கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தினர். அவர்களை பிடிக்க சென்ற போலீஸ் ஏட்டு செந்தில்குமார் என்பவரை அரிவாளால் வெட்டினர். எஸ்.பி.சிலம்பரசன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு ரவுடிகளை தேடினர். தப்ப முயன்றபோது பேச்சிதுரையின் கால்களில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். சந்துருவையும் கைது செய்தனர். இருவரும் காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் மீதும் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர்.
20 hour(s) ago
02-Jan-2026
30-Dec-2025