உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ம.பி.,யில் போலீஸ் தாக்கியதில் இறந்த தொழிலாளி உடலை மீட்டுத்தர கோரிக்கை

ம.பி.,யில் போலீஸ் தாக்கியதில் இறந்த தொழிலாளி உடலை மீட்டுத்தர கோரிக்கை

திருநெல்வேலி:திருநெல்வேலியை சேர்ந்த கூலி தொழிலாளி மத்திய பிரதேசத்தில் போலீசார் தாக்குதலில் இறந்ததாக கூறி அவரது உடலை மீட்டுத் தர குடும்பத்தினர் சபாநாயகர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சுண்டவிளையை சேர்ந்தவர் மாசானமுத்து 44. கூலித்தொழிலாளி. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இட்லி கடையில் வேலை பார்த்தார். தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாது. எனவே அவர் அந்த வேலையில் இருந்து விலகி சொந்த ஊருக்கு கிளம்பினார்.சென்னை திரும்பி வர சென்னை விரைவு ரயிலில் பயணிக்க டிக்கெட் வைத்திருந்தவர், விபரம் அறியாமல் வேறு ரயிலில் ஏறி விட்டார். அந்த ரயிலில் மத்திய பிரதேசத்தில் கஞ்ச் பசோடா நகரில் இறங்கியுள்ளார். அங்கு போலீசார் அவரை சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துத்சென்றனர். விசாரணையில் அவர் போலீஸ் ஸ்டேஷனில் இறந்துள்ளார். போலீசார் அவரது இறப்பு குறித்து மனைவி மற்றும் குடும்பத்திற்கு தெரிவித்தனர்.இந்நிலையில் மாசானமுத்து போலீசார் தாக்கி இறந்துள்ளார். இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்கவும் அவரது உடலை மீட்டுத் தரும்படியும் முதல்வர் ஸ்டாலினுக்கு, சபாநாயகர் அப்பாவு மூலம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். சபாநாயகர், மாசானமுத்துவின் மனைவி சாந்தகுமாரி மற்றும் மகள் அபிஷா ஆகியோர் நேற்று திருநெல்வேலியில் கலெக்டர் சுகுமாரை அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை