உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  மது போதை தகராறில் இரட்டை கொலை

 மது போதை தகராறில் இரட்டை கொலை

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மது போதையில் ஏற்பட்ட தகராறு இரட்டை கொலையில் முடிந்தது. திருநெல்வேலி அருகே தச்சநல்லூர் கரையிருப்பை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மூக்கன் 52. அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் தனியார் நிறுவன காவலாளி தங்க கணபதி 50. இருவரும் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலையாகி வெளியே வந்தனர். டிச., 20 இரவு அங்குள்ள பழுதடைந்த அங்கன்வாடி மையம் அருகே அவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மூக்கன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்ககணபதியை சரமாரியாக வெட்டினார். இந்த தகவல் அறிந்து தங்ககணபதியின் சகோதரர் முத்துகுமரன் 46, மூக்கனின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த மூக்கன், தங்க கணபதி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மூக்கன் சிகிச்சை பலனின்றி டிச., 21 இறந்தார். முத்துக்குமரனை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தங்க கணபதியும் நேற்று இறந்தார். நண்பர்களுக்குள் ஏற்பட்ட போதை தகராறு இரட்டை கொலையில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை