உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பேராசிரியர்கள் மீது பெண் உதவி பேராசிரியர் பாலியல் புகார்

பேராசிரியர்கள் மீது பெண் உதவி பேராசிரியர் பாலியல் புகார்

திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இரு பேராசிரியர்கள் மீது இளம் பெண் உதவி பேராசிரியர் கூறியுள்ள பாலியல் புகார் குறித்து பல்கலை கமிட்டி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுபவரிடம் பெண் ஒருவர் பிஎச்.டி., ஆய்வுக்கு பதிவு செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6f8z7gy3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் அதே துறையில் தற்காலிக உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பெண் அங்கு பணியாற்றும் இரு ஆண் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மனரீதியான தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறையினர் பல்கலையில் விசாரணை மேற்கொண்டனர்.இருப்பினும் இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்று அப்பெண் குற்றச்சாட்டுகளை கூறி புதிய ஆடியோ வெளியிட்டார். திருநெல்வேலி பல்கலையில் இத்தகைய புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஐ.சி.சி.,குழுவின் விசாரணைக்கு துணைவேந்தர் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை