| ADDED : ஜன 26, 2024 01:51 AM
திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை ஆனைகுடியை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. பனங்காட்டு படை என்ற கட்சியின் தலைவராக செயல்பட்டார். 2022ல் நாங்குநேரி, மஞ்சங்குளம், சாமிதுரை கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைதானார். ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.ஆனைக்குடியில் உள்ள அவரது வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில் துப்பாக்கி, குண்டுகள், துப்பாக்கியில் பொருத்தும் பைனாகுலர், மான் கொம்பு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. நேற்று இரவிலும் போலீசார் அங்கு முகாமிட்டிருந்தனர்.