மேலும் செய்திகள்
ஜெயிலர் மீது தாக்குதல் கைதி மீது புகார்
09-Dec-2025
அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை உடைப்பு
07-Dec-2025 | 2
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
06-Dec-2025
மோசடியாக அல்வா விற்பனை 6 கடைகள் மூடல்
06-Dec-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் மாவட்ட செயலர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்தது. எம்.பி., ஞானதிரவியம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.நாங்குநேரி ஒன்றிய செயலராக இருப்பவர் ஆரோக்கிய எட்வின். இவரது மனைவி சவுமியா, நாங்குநேரி யூனியன் தலைவராக உள்ளார். செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கிய எட்வின் பேசுகையில், ''தற்போதைய கலெக்டரை உடனடியாக மாற்ற வேண்டும். அவர் உள்ளாட்சி செயல்பாடுகளில் தலையிடுகிறார். வளர்ச்சி பணிகளை நடக்கவிடாமல் செய்கிறார்.அவர் கலெக்டராக தொடர்ந்தால் தி.மு.க.,வுக்கு 50,000 ஓட்டுகள் குறையும். தி.மு.க., தேர்தலை சந்திப்பதிலும் சிரமம் உள்ளது,'' என்றார். அக்கட்சியினர் வேறு சிலரும்இதை வலியுறுத்தினர்.ஆவுடையப்பன் பேசுகையில், ''தி.மு.க.,வினர் பார்லிமென்ட் தேர்தலில் ஓட்டு கேட்டு செல்வதற்கு முன்பாக, குறைகள் முழுவதையும் களையவேண்டும்,'' என்றார்.
09-Dec-2025
07-Dec-2025 | 2
06-Dec-2025
06-Dec-2025