உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ஒருவர் கைது

 அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் உழவர் சந்தை அருகே அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார். இங்கு நேற்றுமுன்தினம் இரவு 2 வாலிபர்கள் மதுபோதையில் வந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களில் தீ வைத்து வீசி வெடித்தனர். அதனை ஒருவர் அலைபேசியில் பதிவு செய்து நண்பர் களுக்கு அனுப்பியுள்ளார். சம்பவ இடத்தில் வெடித்த சத்தத்தால் பொதுமக்கள் திருநெல்வேலி டவுன் போலீ சாருக்கு தெரிவித்தனர். விசாரணையில் டவுன், தடிவீரன்கோவில் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் 22, உள்ளிட்ட இருவர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். அவர் மீது பல வழக்குகள் உள்ளன. மற்றொருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை