மேலும் செய்திகள்
பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு
21-Jul-2025
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற தாய், மகள் 13 பவுன் நகைகளை திருடியதால் கைது செய்யப்பட்டனர். நாங்குநேரி அருகே கீழக்காரங்காட்டைச் சேர்ந்தவர் நாகம்மாள் 35. இவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திசையன்விளை அருகே சீலாத்திகுளத்தைச் சேர்ந்த உறவினர் பொன்னம்மாள் 45, அவரது மகள் நந்தினி 19, வந்தனர். நிகழ்ச்சிக்கு பிறகு பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை என நாகம்மாள் தேடினார். இதுகுறித்து நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் உறவினர்களிடம் விசாரித்தனர். பொன்னம்மாள், நந்தினியை விசாரித்த போது நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். திருடிய நகைகளை வழக்கறிஞர் ஒருவர் மூலம் வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றதும் தெரிய வந்தது. தாய், மகள் மற்றும் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
21-Jul-2025