மேலும் செய்திகள்
காதல் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது
15-Oct-2024
திருநெல்வேலி ; திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி..யாக இருப்பவர் சிலம்பரசன். இவரது அலுவலகத்தில் அமைச்சு பணிகளில் பல்வேறு கண்காணிப்பாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஒருவர் கிருஷ்ணமூர்த்தி, 55, சமீபத்தில் போலீஸ் வேலைக்கு தேர்வானவர்கள் தாங்கள் வசிக்கும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தங்கள் மீது வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என தடையில்லா சான்று பெற விண்ணப்பித்திருந்தனர்.சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து வரும் சான்றிதழ்களை பெற்று மேலிடத்திற்கு ஒப்படைக்கும் பணியில் இருக்கும் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி இதற்காக இளைஞர்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார். ரூ. 40 லட்சம் வரை வசூல் செய்யவும் அவர் திட்டமிட்டிருந்தார்.இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன. எஸ்.பி.சிலம்பரசன், டி.ஐ.ஜி., மூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். பணம் கேட்டது ஊர்ஜிதமானதால் கிருஷ்ண மூர்த்தியை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி., மூர்த்தி உத்தரவிட்டார்.
15-Oct-2024