உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் திறப்பு: திருநெல்வேலி மக்கள் மகிழ்ச்சி

ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் திறப்பு: திருநெல்வேலி மக்கள் மகிழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ரூ 85 கோடியில் கட்டப்பட்ட ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்து, புதிய பஸ்களை துவக்கி வைத்தார். 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் இன்று பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து திருநெல்வேலி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த 2018ம் ஆண்டு ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டது. மாநகராட்சியின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ், ரூ.85 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது. கொரோனா காலக்கட்டம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக கட்டுமான பணிகள் தாமதம் அடைந்தது. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று(பிப்.,18) பஸ் ஸ்டாண்டை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.

வசதிகள் என்னென்ன?

4 மாடி கட்டங்களை கொண்டதாக இந்த பஸ் ஸ்டாண்டில் கடைகள், தரை தளத்திற்கு கீழே பைக்குகள், கார்கள் உள்ளிட்டவை நிறுத்தும் வசதி என பல்வேறு வசதிகள் உள்ளன. பயணிகளை கவரும் விதமாக பல வண்ணங்களில் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் பஸ் ஸ்டாண்ட் காட்சி அளிக்கிறது.

'நம் நெல்லை நம் பெருமை'

பஸ் ஸ்டாண்டின் முன்பகுதியில் 'நம் நெல்லை நம் பெருமை' என்ற வாசகத்துடன் அலங்கார செடிகளும் வைக்கப்பட்டுள்ளன. சிறிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை