கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கடல் வழியே இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கூடங்குளம் கடற்கரை வழியே இலங்கைக்கு மஞ்சள், பீடி இலைகள், அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றன. நேற்று உலகரட்சகர்புரம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு லாரியில் 2 டன் பீடி இலைகள் இருந்தன. அதன் இலங்கை மதிப்பு ரூபாய் 50 லட்சம். அதன் பின்னால் வந்த காரில் கடத்தல் கும்பல் இருந்தது.போலீசை கண்டதும் காரை வேறு புறம் திருப்பிச் சென்றனர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர். இதில் கூத்தங்குழி ஜனா 70, ஸ்ரீவைகுண்டம் சண்முகம் 25, ஏரல் சந்தோஷ் குமார் 23, துாத்துக்குடி அந்தோணிராஜ் 36, தளபதி சமுத்திரம் முத்துக்குமார் 42, கைது செய்யப்பட்டனர். லாரி, கார் பறிமுதல் செய்யப்பட்டன.