| ADDED : ஆக 01, 2011 01:59 AM
குற்றாலம் : பிரானூரில் தமிழ்நாடு அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.தமிழ்நாடு அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் பிரானூர் பார்டரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அனைத்து கட்டட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராகவன் தலைமை வகித்தார். இணை தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தார். தென்காசி கட்டட பொறியாளர் சங்க தலைவர் விநாயகமூர்த்தி ஸ்தபதி வரவேற்றார். மாநில தலைவர் மோகன்ராஜ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.நெல்லை மண்டல நகர ஊரமைப்பு துறை துணை இயக்குநர் சேகரன், தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் சுந்தரராஜன் மற்றும் இன்ஜினியர்கள் சிவலிங்கம், சந்திரமவுலி, செந்தில்குமார், சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம், ராஜேந்திரன், ராமலிங்கம், மாநில மக்கள் தொடர்பு அதிகாரி பாஸ்கரன், குமார் உட்பட பலர் சங்க வளர்ச்சி குறித்து பேசினர்.நிகழ்ச்சியில் ராஜபாளையத்தை சேர்ந்த இன்ஜினியர் கணேசன் மகள் விவேகதர்சினி நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 6ம் இடம் பெற்றதை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்த 560 இன்ஜினியர்கள் கலந்து கொண்டனர்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.