உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தாமிரபரணியில் உயிர்நீத்தவரின் குடும்பத்தினர்களுக்கு வேலைவாய்ப்பு: தமமுக.,தலைவர் பேட்டி

தாமிரபரணியில் உயிர்நீத்தவரின் குடும்பத்தினர்களுக்கு வேலைவாய்ப்பு: தமமுக.,தலைவர் பேட்டி

திருநெல்வேலி : தாமிரபரணியில் உயிர்நீத்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில்,''தாமிரபரணியில் உயிர்நீத்த தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தியாகத்தூண் அமைப்பதால் அரசிற்கு எவ்வித நஷ்டமும் ஏற்படப்போவது இல்லை. தாமிரபரணியில் உயிர்நீத்த 17 பேரின் குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பநிலையை கருத்தில் கொண்டு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ