உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சுற்றுலா பயணிகள்குற்றாலத்தில் அலை மோதல்

சுற்றுலா பயணிகள்குற்றாலத்தில் அலை மோதல்

குற்றாலம்:குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.குற்றாலத்தில் கடந்த வாரம் மலைப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்தது. பின் வெயிலின் தாக்கம் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்ததையடுத்து அருவிகளில் சற்று தண்ணீர் குறைந்து தற்போது மிதமாக தண்ணீர் விழுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் மெயின்அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி போன்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் காரணமாக அனைத்து அருவிகளிலும் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர். நேற்று குற்றாலத்தில் வெயில் காணப்பட்டாலும், வெயிலின் தாக்கம் தெரியமலிருக்க குளிர்ந்த தென்றல் காற்று வீசியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை