உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நாயகர் சதூர்த்திக்கு டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை கோரி மனு

நாயகர் சதூர்த்திக்கு டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை கோரி மனு

சுரண்டை:விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வரும் 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென பா.ஜ., சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆலங்குளம் ஒன்றிய பா.ஜ., பொது செயலாளர் சோலைச்சேரி டாக்டர் அன்புராஜ் தமிழக அரசு மற்றும் சென்னை டாஸ்மாக் மேலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-'வரும் 1ம் தேதி விநாயகர் சதூர்த்தி விழா அனைவராலும் கொண்டாடப்படும் பெரிய விழாவாகும். மேலும் அன்று அரசு விடுமுறை தினமாகவும் உள்ளது. அன்று அனைத்து சமுதாயத்தினரும் விநாயகர் வழிபாடு நடத்தி வருகின்றனர். எனவே அன்று ஒருநாள் மட்டும் தேசத்தையும், தெய்வீகத்தையும் காப்பாற்றும் விதமாக தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ