உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தெற்கு வள்ளியூரில் விதை கிராம பயிற்சி

தெற்கு வள்ளியூரில் விதை கிராம பயிற்சி

திருநெல்வேலி:வள்ளியூர் வட்டாரம் தெற்கு வள்ளியூர் கிராமத்தில் விதை கிராம திட்ட விவசாயிகள் பயிற்சி நடந்தது.பயிற்சிக்கு நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தேவசகாயம் தலைமை வகித்தார். வள்ளியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மேரி அமிர்தபாய் வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குநர் (மத்திய திட்டம்) குமாரசாமி, வேளாண்மை துணை இயக்குநர் (மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்) பாலசுப்பிரமணியன் நெல்விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.வள்ளியூர் வட்டார வேளாண்மை அலுவலர் சுஜாதாபாய் நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவராஜன், குருபாக்கியம், ராமநாதன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை