| ADDED : செப் 21, 2011 02:45 AM
திருநெல்வேலி:கூடன்குளம் அணுமின் நிலையத்தை கைவிட வலியுறுத்தி நெல்லை
ரயில்வே ஸ்டேஷன் முன்பு வணிகர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வர்த்தக கழக தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
வணிகர் சங்கங்களின் பேரவை துணைத்தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன், ஐவுளி
வியாபாரிகள் சங்கத் தலைவர் சொனா வெங்கடாச்சலம், தொழில் வர்த்தக சங்க
துணைத்தலைவர் வீபோரஸ் தேவசேனாதிபதி, பேட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர்
சுல்தான் அலாவுதீன், பாளை., மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர்
சாலமோன், பாளை., தொழில் வர்த்தக சங்கம் செயலாளர் மேகநாதன், மேலப்பாளையம்
அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவர் பரகத்துல்லா, நெல்லை சந்திப்பு ஹைரோடு
வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட வர்த்தக கழக செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். தமிழ்நாடு வணிகர்
சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பேசுகையில், 'எந்த போராட்டத்திற்கும்
ஒரு தீப்பொறி வேண்டும். அந்த பொறியில் இடிந்தகரை மக்கள் தொடர் உண்ணாவிரத
போராட்டம் நடத்திவருகின்றனர். மக்கள் போராட்டத்திற்கு மத்திய அரசு பணியும்.
மக்கள் நலனுக்காக வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறது.
தமிழகத்தின் தென்பகுதியில் கூடன்குளம் அணுமின் நிலையமும், வடபகுதியில்
கல்பாக்கம் அணுமின் நிலையமும் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் தமிழகம்
அழியும் சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த 2 அணுஉலைகளையும் மூடவேண்டும்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி வரும் 27ம் தேதி கல்பாக்கம்
அணுமின் நிலையம் முன்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நடத்தப்படும் என்றார்'.சிறப்புரையாற்றினார். இதில் வியாபாரிகள் குணசேகரன்,
ஐஸ்வர்யா கணேசன், தங்க நகை வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜாமணி,
ஜெயச்சந்திரன், இளங்கோ, குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட வர்த்தக
கழக செயலாளர் விநாயகம் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் கூடன்குளம் அணுமின்
நிலையத்தை கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.கடைகள்
அடைப்புகூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நெல்லையில் பல
இடங்களில் ஒரு சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.