| ADDED : ஜூன் 04, 2024 05:40 AM
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அருகே வெலமகண்டிகை கிராமத்தில் வீரஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி மகோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு இவ்விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. முதல் நாள் காலை 7:00 மணிக்கு கலசஸ்தாபனம், மூலவருக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.பின், தினமும் காலை 7:00 மணிக்கு அபிஷேகம் 9:00 -- 10:00 மணி வரை சகஸ்ரநாம பாராயணம், 2:00 மணி வரை பஜனை நிகழ்ச்சி, மதியம் 2:00 -- 6:00 வரை ஹரிகதா கான நிகழ்ச்சிகள் நடைபெறும்.வரும் 7ம் தேதி இரவு, 7:00 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தீமிதிப்பர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.