| ADDED : மார் 28, 2024 08:50 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று தேரடி பகுதியில் 100 சதவீத ஓட்டளிக்க பகுதிவாசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தல் படி திருவாலங்காடு வட்டார மருத்துவ அலுவலர் பிரகலாதன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவாலங்காடின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற செவிலியர், மருத்துவர், சுகாதார பணியாளர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட சுகாதார துறை உதவி இயக்குனர் லட்சுமணன் காவல் துறையினர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.l திருத்தணி சட்டசபை தொகுதி, கே.ஜி.கண்டிகை ஊராட்சியில், அடுத்த மாதம், 19ம் தேதி நடைபெறும் லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு சென்று, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என சுகாதார துறையினர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் சுனில், சுகாதார கல்வி அலுவலர் கணேசன், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்கள், 70க்கு மேற்பட்டோர் பங்கேற்று, வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என மனித சங்கலி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.lகும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில், 100 சதவீத ஓட்டு பதிவுக்கான பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமையில், மகளிர் சுய உதவி குழு பெண்கள் வாயிலாக நேற்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.