மேலும் செய்திகள்
23 கிலோ கஞ்சா பறிமுதல் 2 வாலிபர்களுக்கு 'காப்பு'
23-Feb-2025
சென்னை:செங்குன்றம் சோதனைச் சாவடி அருகே, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த செங்குன்றம் மதுவிலக்கு போலீசார், பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில், மூட்டை ஒன்றில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவற்றை கடத்தி வந்த இருவரை கைது செய்து, செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.அதில் அவர்கள், டேவிட்ராஜ், 26 மற்றும் சரண்தீப், 23, என்பது தெரிந்தது. இருவரும் ஒடிசாவை சேர்ந்தவர்கள்.அவர்கள், ஒடிசாவில் இருந்து, ரயில் வாயிலாக கஞ்சா கடத்தி வந்து, பேருந்து வாயிலாக கோவைக்கு செல்ல திட்டமிட்டிருந்தது தெரிந்தது.இதையடுத்து, 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர். அதேபோல், ஆவடி அடுத்த கன்னடபாளையம், சவுத்ரி தெருவில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து, அவரது பையை சோதனை செய்தனர்.அப்போது, அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த திலீபன், 22, என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
புழல் தண்டனை சிறையில், வழக்கம் போல் , சிறை போலீசார் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அப்போது, ஒரு அறையில் ஒரு சிறு பொட்டலம் மறைக்கப்பட்டு இருந்தது. அதை பிரித்து பார்த்த போது, அதில் 3 கிராம் கஞ்சா இருந்தது.விசாரணையில், உடுமலைப்பேட்டை கொலை வழக்கு கைதியான, திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ், 39, கஞ்சா பதுக்கி வைத்தது தெரியவந்தது.இதுகுறித்து, சிறைத்துறை சார்பில், புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
23-Feb-2025