உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மெதுாரில் மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த 3 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

மெதுாரில் மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த 3 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

பொன்னேரி:பொன்னேரி - பழவேற்காடு சாலையில் மெதுார், திருப்பாலைவனம் பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் சிலர் சுற்றித்திரிகின்றனர். அவ்வப்போது சமூக ஆர்வலர்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்படுகின்றனர்.பொன்னேரி அடுத்த மெதுார் பகுதியில் மனநலம் பாதித்தவர்கள் மூன்று பேர் சுற்றித்திரிந்தனர். இவர்கள் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல், வியாபாரிகள் தரும் உணவுகளை சாப்பிட்டு, சாலையோரங்களில் படுத்து உறங்கினர். அவர்கள் அழுக்கு உடை மற்றும் நீண்ட முடிகளுடன் சுற்றித்திரியும்போது பொதுமக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகிறது.அவர்களின் பரிதாப நிலையை கண்டு, பொன்னேரி மற்றும் மெதுார் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் எப்.ஷகில் முகமது, எம்.பி., சேகர் ஆகியோர், சோழவரம் அடுத்த திருநிலை கிராமத்தில் உள்ள அன்பகம் மனநலம் காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக காப்பகத்தில் இருந்து ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. பொன்னேரி காவல் நிலையத்தில் காப்பகத்திற்கு கொண்டு செல்வதற்கான உரிய சான்று பெறப்பட்டது.பின், அவர்களை சமூக ஆர்வலர்கள் மீட்டு, காப்பக நிர்வாககளிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ