உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பட்டாவிற்கு லஞ்சம் பெற்ற வழக்கு பெண் அலுவலருக்கு 3 ஆண்டு சிறை

பட்டாவிற்கு லஞ்சம் பெற்ற வழக்கு பெண் அலுவலருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை:கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் மெக்கானிக் சுரேஷ். இவர், 2018ல் தன் மனைவி பாரதி பெயரில், வீடு ஒன்றை கிரையம் செய்துள்ளார்.இதையடுத்து, பட்டா பெயர் மாற்றக்கோரி, தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.பட்டா மாற்றத்துக்கு தேவையான வரைப்படத்தை தாசில்தாருக்கு அனுப்பி வைக்க, அங்கிருந்த முதுநிலை வரைபடவாளர் தமிழ்செல்வி, 38, என்பவர், 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.பின், 3,000 ரூபாய் கொடுக்கும்படி கூறியுள்ளார். இது குறித்து சுரேஷ், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.போலீசாரின் அறிவுரைப்படி, லஞ்ச பணத்தை 2021 ஜூலை 16ல் சுரேஷ் கொடுத்தபோது, அதை பெற்று கொண்ட தமிழ்செல்வியை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.மணிமேகலை முன் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, 'தமிழ்செல்வி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது' எனக் கூறி, அவருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை