மேலும் செய்திகள்
அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை
11 hour(s) ago
சென்னை: சென்னையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில், 5.26 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளும், 59.13 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் வாயிலாக, 24ம் தேதி முதல் சோதனை நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக, ரசீது இல்லாமல், அண்ணாநகர் தொகுதியில் எடுத்து செல்லப்பட்ட 81,400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் தொகுதியில் 3.09 லட்சம் ரூபாய், வேளச்சேரி தொகுதியில் 1.50 லட்சம் ரூபாய் என, மொத்தம் 5.24 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5.26 கோடி ரூபாய் மதிப்பிலான 7,999 கிராம் தங்க கட்டிகளும், 59,13,350 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன.தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் அளிக்க உருவாக்கப்பட்ட 'சிவிஜில்' செயலியில், இதுவரை 105 புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
11 hour(s) ago