உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு 6,255 பேர் ஆப்சென்ட்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு 6,255 பேர் ஆப்சென்ட்

14.09.2024/திருவள்ளூர்/என்.சரவணன்/9944309623/கீ:865/12:40 மணிதிருவள்ளூர், செப்.15-தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, குரூப்-2 தேர்வில், 6,255 பேர் தேர்வு எழுதவில்லை.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஹோலி கிரசென்ட் மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கான, எழுத்து தேர்வு 71 மையங்களில், 21,384 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இந்த தேர்வில், 15,129 பேர் தேர்வு எழுதினர். 6,255 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு நடைபெறுவதற்காக, தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிவறை, பேருந்து உள்ளிட்ட வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ