உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 7,500 மாணவருக்கு கல்வி கடன் ரூ.106 கோடி நிதி ஒதுக்கீடு

7,500 மாணவருக்கு கல்வி கடன் ரூ.106 கோடி நிதி ஒதுக்கீடு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு, 7,500 மாணவ, மாணவியருக்கு கல்விக் கடன் வழங்க, 106 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கடன் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வங்கியாளர் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் பங்கேற்றனர். கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்து பேசியதாவது:கல்லுாரிகளில் இருந்து கல்வி கடன் கேட்டு வரும் மாணவ, மாணவியருக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் வித்யா லட்சுமி'போர்டல்' www.vidyalakshmi.co.in-ல் விண்ணப்பித்தவுடன் ஆரம்ப நிலை அலுவலர்கள், மண்டல அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.மண்டல நிலைய அலுவலர்களுடன் மனுக்கள் நிலுவையில் இருந்தால் உடனடியாக அவற்றை பரிசீலனை செய்து கல்விக்கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தமிழக அரசு சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் வாயிலாக, நடப்பாண்டில் 7,500 மாணவ மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பம் பெற்று, கல்விக் கடனுக்காக 106 கோடி ரூபாய் திருவள்ளூர் மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, வங்கியாளர்கள் மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு எற்படுத்தி கல்வி கடன் வாங்குவதற்கான பணியினை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், உதவி கலெக்டர்-பயிற்சி ஆயுஷ் குப்தா, முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை