உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கட்சி துண்டு அணிந்து வந்த வேட்பாளரால் சலசலப்பு

கட்சி துண்டு அணிந்து வந்த வேட்பாளரால் சலசலப்பு

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் லோக் சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆரணி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் நேற்று மாலை விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்துக்கொண்டிருந்தது. அப்போது, அ.தி.மு.க., கூட்டணி கட்சியின் தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பி, கட்சி துண்டு அணிந்தபடி ஓட்டுச்சாவடிக்குள் வந்தார். அவருடன், அ.தி.மு.க., மாவட்ட செயலர் சிறுனியம் பலராமன் உடன் வந்தார். கட்சி துண்டு அணிந்து வேட்பாளர் வந்ததை கண்ட தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரு கட்சியை சேர்ந்த ஏராளமானோர் சூழ்ந்துக்கொண்டதால் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானம் பேசி அனைவரையும் கலைத்து அனுப்பினர். 30 நிமிட தாமதத்திற்கு பின் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை