உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளிப்பட்டில் பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்

பள்ளிப்பட்டில் பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகரின், வடமேற்கில், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி, பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லை துவங்குகிறது. பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து, ஆந்திர மாநிலம், நகரி, புத்துார், சித்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆந்திர மாநில அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளிப்பட்டு நகரின் பிரதான பகுதியாக விளங்கும் பேருந்து நிலையத்தில், சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக இந்த சமுதாயக்கூடம் பூட்டியே கிடக்கிறது. இந்த சமுதயாக்கூடத்தின் நுழைவாயில் பகுதியில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தி வைத்திருப்பதும் சமுதாயக்கூடத்தை மேலும் பாழடைய காரணமாக அமைந்துள்ளன. சமுதாயக்கூடத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை