உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.10 லட்சம் மது பாட்டில் மாயமானதாக சோதனை

ரூ.10 லட்சம் மது பாட்டில் மாயமானதாக சோதனை

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த காக்களூர் சிட்கோ தொழில் பூங்காவில் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோன் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது.இங்கிருந்து மதுபானங்கள் 200க்கும் மேற்பட்ட சில்லரை மதுபான விற்பனை கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.இங்கு ஒப்பந்த போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.தொழிலாளர்கள் இரு குழுவாக பணியாற்றுகின்றனர். குழுவினர் ஒருவருக்கு ஒருவர் புகார் கூறி வருகின்றனர்.சில தினங்களுக்கு முன் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் காணாமல் போனதாக ஒரு குழுவினர் வதந்தி பரப்பியதாக கூறப்படுகிறது.இதையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் பொறுப்பு மேலாளர் ரேணுகா, வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிகாரிகள் மதுபான பாட்டில்களை ஆய்வு செய்தனர். அதில், மதுபான பாட்டில்கள் இருப்பு சரியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றதாக திருவள்ளூர் தாலுகா போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை