உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி சிப்காட் நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்

கும்மிடி சிப்காட் நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி முழுதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் எழுதப்பட்டு உள்ளதாவது:சிப்காட் வளாக கால்வாய்களில் வெளியற்றப்படும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் அனைத்தும் தாமரை ஏரியில் கலக்கிறது. மேலும் சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. தொழிற்சாலை மாசுவை கட்டுப்படுத்த பசுமை வளாகம் ஏற்படுத்தி முறையாக பராமரிப்பது இல்லை. கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை முறையாக செயல்படுத்துவது இல்லை. சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள கிராம மக்களின் சுகாதாரம் சம்பந்தமான எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்வது இல்லை. மேற்கண்ட பிரச்னைகள் குறித்து பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்படிக்கு கும்மிடிப்பூண்டி சிப்காட் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டிகளால் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ